NEW POST

Pages

Tuesday, May 27, 2014

மக்காச்சோள சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்

மக்காச்சோளத்தில் பொதுவாக ஏற்படும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட குருணை பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை மணலுடன் கலந்து ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோ என்ற அளவில் விதைத்ததிலிருந்து 20 நாட்கள் வயதுடைய பயிர்களின் குருத்தில் இட வேண்டும்.

குயினைல்பாஸ் 5 சத குருணை- 15 கிலோ (அல்லது) கார்பரில் 4 சத குருணை- 20 கிலோ

மக்காச்சோளத்தில் ஏற்படும் பூஞ்சாண நோயான அடிச்சாமபல் நோயை கட்டுப்படுத்த விதைத்த 20வது நாளில் மெட்டலாக்ஸில்(72 சதம் நனையும் தூள்) 1 கிலோவை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளின் மேல் நன்கு நனையும்படி கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

தகவல்: உழவர் பயிற்சி பள்ளி,புதுக்கோட்டை.

தகவல் அனுப்பியவர் – வினோத் கண்ணா, புதுக்கோட்டை

No comments:

Designed By Blogger Templates