NEW POST

Pages

Tuesday, May 27, 2014

மதிப்பெண் சான்றிதழ்களை 'லேமினேசன்' செய்யக் கூடாது: தமிழக அரசு

மதிப்பெண் சான்றிதழ்களை "லேமினேசன்" செய்யக் கூடாது என்று தமிழக தேர்வுகள் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"அரசு தேர்வுகள் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் "லேமினேசன்" செய்வதாக தெரியவருகிறது. "லேமினேசன்" செய்யும்பொழுது சான்றிதழ்கள் பழுதடைய நேரிடுகிறது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் திருத்தம் செய்ய நேரிடும் போது "லேமினேசன்" செய்திருந்தால் திருத்தம் செய்வது கடினமாக உள்ளது. வெளிநாடு செல்லும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திரை வைக்கும்போது லேமினேசனில் இருந்து சான்றிதழை பிரிக்கும் போது சான்றிதழ் சிதைய நேரிடுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் "லேமினேசன்" செய்ய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை: மதிப்பெண் சான்றிதழ்களை "லேமினேசன்" செய்ய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை: மதிப்பெண் சான்றிதழ்களை "லேமினேசன்" செய்யக் கூடாது என்று தமிழக தேர்வுகள் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Designed By Blogger Templates