NEW POST

Pages

Monday, March 17, 2014

அனுப்பிய மெயில் படிக்கப்பட்டதா?


நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் உரியவர் படித்துவிட்டாரா இல்லையா என்று எப்படி அறிந்துகொள்வது?

அந்த வசதியை நமக்கு கொடுக்கிறது ஸ்பைபிக் என்ற தளம்.

நீங்கள் பயன்படுத்தும் E-Mail கிளையண்ட் எதுவாக இருந்தாலும் சரி.. அதாவது, Gmail, Yahoo mail, Rediffmail, Eudora, Gmail, Hotmail, AOL Email இப்படி எந்த ஒரு மின்னஞ்சல் சேவையை நீங்கள் பயன்படுத்தினாலும், இச்சேவையைப் பயன்படுத்தி, உங்கள் நண்பர் மின்னஞ்சலைத் திறந்து படித்துவிட்டாரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

மின்னஞ்சலை தட்டச்சிட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு www.spypig.com தளத்திற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி, மின்னஞ்சலின் தலைப்பு ஆகியவற்றை கொடுத்துவிடுங்கள்.
அடுத்து Select your SpyPig tracking image என்பதற்கு கீழாக உள்ள ஐந்து படங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்கள் விருப்ப படங்களையும் உங்கள் கணினியிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.)
பிறகு click to create my spypic என்ற படத்தின் கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்களுடைய tracking image உருவாகியிருக்கும்.
அதை காப்பி செய்துகொண்டு, நீங்கள் தட்டச்சிட்டு வைத்திருக்கும் மின்னஞ்சலில் இறுதியில் Past செய்துவிடவும்.
இப்பொழுது உங்கள் மின்னஞ்சலில் Send பட்டனை அழுத்தி மின்னஞ்சலை அனுப்பிவிடவும்.
உங்கள் மின்னஞ்சல் நண்பரை சென்றடைந்து, அதை அவர் திறந்ததும் உங்களுக்கு மின்னஞ்சல் திறக்கப்பட்டுவிட்டது என்ற தகவல்களும், எந்த ஊரிலிருந்து திறக்கப்பட்டது என்ற தகவல்கள் அனைத்தும் வந்துவிடும்.

Source: www.spypig.com

No comments:

Designed By Blogger Templates