NEW POST

Pages

Thursday, September 4, 2014

தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கலாம்

உங்கள் நண்பருக்கோ, காதலிக்கோ நீங்கள தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியைப்
பற்றி இனி கவலைப்படவேண்டாம். அவர்கள் அதைப் படிக்கும் முன்னரே
அழித்துவிடும் புது செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

"இன்விஸிபிள் டெக்ஸ்ட்" ("Invisible Text") எனும் இந்த செயலி, பயனர்கள்
அனுப்பிய குறுஞ்செய்தியை, பெறுபவர் படிக்கும் முன்னரே அழித்துவிடும்
வசதியைக் கொண்டுள்ளது. இதில் ஒரே சிக்கல், செயலி அழிக்கும் வரை, அந்த
குறுஞ்செய்தி படிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

இதே போல, வீடியோ மற்றும் குரல் பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை
அனுப்பிவிட்டு, அவை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பெறுநர்களின் மொபைலில்
இருக்குமாறு நேரத்தை நிர்ணயிக்கும் டைமர் வசதியும் இதில் உள்ளது.

ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு தற்போது
இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள செயலி அல்லவா! கூடவே ஒரு முக்கிய
தகவல்: உங்கள் குறுஞ்செய்தி மற்றும் படங்களை பெறுபவரது மொபைலிலும்,
"இன்விஸிபிள் டெக்ஸ்ட்" செயலி இருந்தால்தான் இந்த அம்சம் வேலை செய்யும்.

source: the hindu

No comments:

Designed By Blogger Templates