இந்தியாவில் இணைய வெளியில் ஏற்படும் தாக்குதல்களைக் கவனித்து, பாதுகாப்பிற்கான ஆலோசனைகளை வழங்கி வரும் Computer Emergency Response Team of India (CERTIn) மையம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் உள்ள குறியீட்டுப் பிழைகள் மிக அதிக ஆபத்து விளைவிப்பவனாக உள்ளன என்று அறிவித்துள்ளது. இவற்றின் மூலம், கெடுதல் விளைவிக்க எண்ணும் ஒருவர், மிக எளிதாக, பெர்சனல் கம்ப்யூட்டரைக் கைப்பற்றி, தனி நபர் தகவல்களைத் திருட முடியும். இதற்கென, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எச்.டி.எம்.எல். ஆவணங்களைத் தயாரித்து, அவற்றைப் பார்க்க முயற்சிக்கையில், பயனாளர்களின் கம்ப்யூட்டருக்குள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் பதியப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.எனவே, அனைத்து பயனாளர்களும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பதிப்பினை விடுத்து, பதிப்பு 11க்கு மாறிக் கொள்ளுமாறு, இந்த பாதுகாப்பு மையம் எச்சரித்துள்ளது.மேலும், கூடுதல் பாதுகாப்பிற்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ள Microsoft Enhanced Mitigation Experience Toolkit (EMET) என்னும் டூலை கம்ப்யூட்டரில் வடிவமைத்துப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment