NEW POST

Pages

Sunday, July 13, 2014

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை

கடந்த 3 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்கப் படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ப.மோகன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய ஊரகத் தொழில்துறை அமைச்சர் ப.மோகன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவுமூப்பை தக்க வைத்துக் கொள்ளவும், அதன்மூலம் வேலை வாய்ப்பை பெறவும் உதவும் வகையில் முதல்வர் உத்தரவின் படி, 2014-15-ம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.

No comments:

Designed By Blogger Templates